Tuesday, May 4, 2010

கார்பரேட் கலாச்சாரம்

இன்று உயர் கல்வி என்பது மாணவர்களை வேலை வாய்ப்புகளுக்கு தயார் செய்வதை ஆதாரமாக கொண்டுள்ளது. வேலை வாய்ப்புகள் என்பதோ மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் பரிமாணமான 'கார்பரேட் கலாச்சாரம்' தழுவத் துணியும் ஆர்வலர்களுக்கு மட்டுமே என்பதாக உள்ளது. பன்னாட்டு நிருவனங்கள் மட்டும் அல்லாது இந்நாட்டின் தனியார் மற்றும் பொதுத் துறை நிருவனங்களிலும் கார்பரேட் கலாச்சாரம் என்னும் கட்டாயம்! கலாச்சாரங்கள் சங்கமிக்கும் நம் இந்திய கலாச்சரம் என்று பெருமையுடன் இதை அனுமதித்தாலும் இன்று இதில் அழிவது நமது பாரம்பரிய கலாச்சாரங்கள் என்பது புரிந்தும் கையாலாகாத நிலையில் உள்ளோம்!! இந்திய மற்றும் தமிழ் பாரம்பரிய கலாச்சாரங்களை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது சமரசத்துடன் கார்பரேட் கலாச்சாரத்தை ஏற்க வேண்டியதுதானா?